ஷீரடி, மந்த்ராலயத்திற்கு சிறப்பு சுற்றுலா ரயில்!
ADDED :3450 days ago
சாய்பாபா, ராகவேந்திரர் உள்ளிட்ட மகான்களின் சன்னிதிகளை தரிசிக்கும் வகையில், சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இது குறித்து, ஐ.ஆர்.சி.டிசி.,யின் கூடுதல் பொது மேலாளர் ரவிகுமார் கூறியதாவது: ஜூன், 14ல், மதுரையில் புறப்படும் சுற்றுலா ரயில், சென்னை வழியாக ஷீரடி செல்கிறது. ஷீரடி சாய்பாபா, பண்டரிபுரத்தில் பாண்டுரங்கன், மந்த்ராலயத்தில் ராகவேந்திரர் தரிசனத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மொத்தம், ஏழு நாட்கள் கொண்ட இந்த சுற்றுலாவுக்கான கட்டணம், 5,845 ரூபாய். தென் மாநில சைவ உணவு, தங்குமிடம், சுற்றிப் பார்க்க வாகன வசதி ஆகி யவை கட்டணத்துக்குள் அடங்கும். சுற்றுலா செல்ல விரும்புவோர், 90031 40681 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.– நமது நிருபர் –