சுருட்டப்பள்ளி குரு கோவில்களில் சிறப்பு பூஜை
ADDED :3451 days ago
ஊத்துக்கோட்டை: சுருட்டப்பள்ளி பள்ளிகொண்டீஸ்வரர் கோவில் வளாகத்தில் உள்ள, தாம்பத்ய தட்சணாமூர்த்திக்கு நேற்று பால், தயிர், பஞ்சாமிர்தம், தேன் ஆகியவற்றால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. இதேபோல், ஊத்துக்கோட்டை ஆனந்தவல்லி சமேத திருநீலகண்டேஸ்வரர் ÷ காவில், தாராட்சி லோகநாயகி உடனுறை பரதீஸ்வரர் கோவில், வடதில்லை பாபஹரேஸ்வரர் கோவில் உள்ளிட்ட கோவில்களில் உள்ள குரு பகவானுக்கு, சிறப்பு பூஜைகள் நடந்தன. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனர்.