உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சுந்தரராஜ பெருமாள் கோவில் பிரம்மோற்சவம் துவக்கம்!

சுந்தரராஜ பெருமாள் கோவில் பிரம்மோற்சவம் துவக்கம்!

ஆர்.கே.பேட்டை:  சுந்தரவள்ளி, விஜயவள்ளி உடனுறை சுந்தரராஜ பெருமாள் கோவில் பிரம்மோற்சவம், நேற்று காலை, கொடியேற்றத்துடன்  துவங்கியது. சேஷ வாகனத்தில் சுவாமி எழுந்தருளினார். ஆர்.கே.பேட்டை பிராமணர் தெருவில், சுந்தரவள்ளி, விஜயவள்ளி உடனுறை சுந்தரராஜ  பெருமாள் கோவில் உள்ளது. 500 ஆண்டுகள் பழமையான இந்த கோவில், 1987ல் புதுப்பிக்கப்பட்டது. தொடர்ந்து நித்திய பூஜைகளும், மார்கழி  உற்சவம், பிரம்மோற்சவம் உள்ளிட்ட விழாக்கள் நடைபெற்று வருகின்றன. பிரம்மோற்சவத்தை ஒட்டி, நேற்று காலை, 7:30 மணிக்கு, கொடியே ற்றமும், அதை தொடர்ந்து ஸ்தாபன திருமஞ்சனமும் நடந்தது. மாலை, 5:00 மணிக்கு, ஊஞ்சல் சேவை உற்சவம்; 7:00 மணிக்கு, சேஷ வாகனத்தில்  சுவாமி எழுந்தருளினார். இன்று மாலை, சிம்ம வாகனத்தில் சுவாமி உலா வருகிறார். நாளை, காலையில் சூரிய பிரபையிலும், மாலையில் சந்திர பி ரபையிலும் சுவாமி எழுந்தருளுகிறார்.  திங்கள்கிழமை கருட சேவை நடக்கிறது. நாளை நடைபெறும் அனுமந்த வாகனத்தை தொடர்ந்து,  புதன்கிழமை தேர் திருவிழா நடைபெற உள்ளது. வியாழக்கிழமை, சக்கர ஸ்தானத்துடன் பிரம்மோற்சவம் நிறைவு பெறுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !