உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சவுடாம்பிகை கோவிலில் மகா பண்டிகை விழா

சவுடாம்பிகை கோவிலில் மகா பண்டிகை விழா

கோவை: ராமலிங்க சவுடாம்பிகை அம்மன் கோவிலில், மகா பண்டிகை பெருந்திருவிழா, ஜூன் 5ல் துவங்கி, 15ம் தேதி வரை நடக்கிறது. கோவை,  ராஜவீதியில் அமைந்துள்ளது பிரசித்தி பெற்ற ராமலிங்க சவுடாம்பிகை அம்மன் கோவில். கோவில் மகா கும்பாபிஷேகம், தேவல மகரிஷி பி ரதிஷ்டை மற்றும் பெரிய அம்மன் பண்டிகை உற்சவம், ஜூன் 5காலை, 7:00 மணிக்கு, பூமார்க்கெட் அருகே ரங்கே கவுடர் வீதியில் உள்ள ராமலிங்க  சவுடாம்பிகை அம்மன் கோவிலில் இருந்து,  சிவாச்சாரியார்கள் ஆலய பிரவேஷத்துடன் துவங்குகிறது. காலை, 8:00 மணிக்கு, கங்கணம் கட்டுதல்,  கோ, அசுவ பூஜை, தேவல மகரிஷிக்கு அபிஷேக பூஜை நடக்கிறது. மாலை, 5:00 மணிக்கு, வாஸ்து பூஜையும், இரவு, 7:00 மணிக்கு, ஆன்மிக  சொற்பொழிவும் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !