உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காரைக்காலில் கோவில் உண்டியலை உடைத்தவர் கைது

காரைக்காலில் கோவில் உண்டியலை உடைத்தவர் கைது

காரைக்கால்: காரைக்காலில் சிவன் கோவில் உண்டியலில் திருடிய முயன்றவரை  போலீசார் கைது செய்தனர். காரைக்கால் நெடுங்காடு சாலையில்  உள்ள பிள்ளைத்தெரு வாசல் ஆற்றுப்படுகையில்  சிவன் கோவில் உள்ளது. இக்கோவிலில் முக்கிய நாட்களில் சிவனுக்கு சிறப்பு அபிஷேகம்  நடைபெறுவது வழக்கம். நேற்று முன்தினம் இரவு கோவில் வாசலில் வைக்கப்பட்ட உண்டியலை மர்ம நபர் ஒருவர் உடைப்பது தெரிய வந்தது. அ ப்பகுதி மக்கள் கோவில் உண்டியலை உடைந்த நபரை மடக்கி பிடித்து காரைக்கால் நகர காவல் நிலையத்தில் ஒப்படைந்தனர். விசாரணையில் நாகப் பட்டினம் மாவட்ட குத்தாலம் பகுதியை சேர்ந்த தர்மலிங்கம், 58; என தெரிய வந்தது. மேலும், இவர் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில்  உள்ளதும், கடந்த சில நாட்களுக்கு முன்புதான் சிறையிலிருந்து வெளியில் வந்ததும் போலீசார் விசாரணையில் தெரியவந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !