உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பில்லூர் கிராம கோவில்களில் வரும் 9ம் தேதி கும்பாபிஷேகம்

பில்லூர் கிராம கோவில்களில் வரும் 9ம் தேதி கும்பாபிஷேகம்

விழுப்புரம்: விழுப்புரம் அடுத்த பில்லுார் கிராமத்தில், வரும் 9ம் தேதி கும்பாபிஷேக விழா நடக்கிறது. விழுப்புரம் அடுத்த பில்லுார் வலம்புரி விநாயகர், முருகன், ஐயனாரப்பன், விஸ்வநாத சுவாமி, மாரியம்மன், பிடாரியம்மன், திரவுபதியம்மன், கங்கையம்மன், அங்காளபரமேஸ்வரி அம்மன், ஐயப்பன் மற்றும் பரிவார தேவதைகளுக்கு வரும் 9ம் தேதி கும்பாபிஷேக விழா நடந்தது. விழாவையொட்டி, காலை 9:00 மணிக்கு விநாயகர், முருகன், விசாலாட்சி சமேத விஸ்வநாதர், மாரியம்மன், பிடாரியம்மன், திரவுபதியம்மன், கங்கையம்மன், அங்காளபரமேஸ்வரியம்மன், ஐயப்பன் கோபுர விமானங்கள் மற்றும் மூலஸ்தானம் கும்பாபிஷேகம் நடக்கிறது. பின், காலை 10:30 மணி முதல் 11:30 மணிக்குள் பூரணி புஷ்கலா சமேத கலிவுராய ஐயனாரப்பன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !