சுந்தரருக்கு பதிலாக சேரமான் பெருமாள் வீதியுலா: நெல்லையப்பர் விழாவில் குழப்பம்!
திருநெல்வேலி: நெல்லையப்பர் கோவிலின் பிரம்மோற்சவ திருவிழாவில், சுந்தரமூர்த்தி நாயனார் உற்சவர் சிலைக்கு பதில், சேரமான் பெருமாள் நாயனார் உற்சவர் சிலை வீதியுலாவில் இடம் பெற்றது, பெரும் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. அறநிலைய துறையின் அலட்சியத்திற்கு சேவார்த்திகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில், ஆண்டுதோறும், ஆனி மாதத்தில் பிரம்மோற்சவம் நடக்கும். மொத்தம், 40 நாட்கள் நடக்கும் அந்த உற்சவத்
தில், முதல், 10 நாட்கள் கிராம தேவதையான புட்டாரத்தி அம்மனுக்கு; அடுத்த, 10 நாட்கள் பிள்ளையாருக்கு; அடுத்த, மூன்று நாட்கள், சம்பந்தர், அப்பர், சுந்தரர் ஆகிய மூன்று நாயன்மார்களுக்கு; அடுத்த, ஏழரை நாட்கள் சந்திரசேகரருக்கு; அடுத்த, 10 நாட்கள் நெல்லையப்பருக்கு என, வகுக்கப்பட்டுள்ளது. ஜூன், 11 முதல் நெல்லையப்பருக்கு, பிரம்மோற்சவம் நடக்க உள்ளது. அதை முன்னிட்டு, மே, 29, 30, 31ம் தேதிகளில், மூவர் முதலிகள் எனப்படும், சம்பந்தர், அப்பர், சுந்தரர் ஆகியோருக்கு திருவிழா நடந்தது. அதில் தான், சுந்தரருக்கு பதில் சேரமான் பெருமாள் நாயனார் உற்சவர்
சிலையை வைத்து, வீதியுலா குழப்பம் செயல் அலுவலராக இருந்த போது, சிலை கணக்கெடுப்பு நடந்தது. அப்போது, சுந்தரரை சேரமான் பெருமாள் நாயனாராகவும், சேரமான்நிகழ்ந்தது.இதுகுறித்து, நெல்லையப்பர் கோவில் சேவார்த்திகள் கூறியதாவது: இந்த கோவிலில், யக்ஞநாராயணன் என்பவர் பெருமாளை சுந்தரராகவும் மாற்றி கணக்கெடுத்து விட்டனர். இரு சிலைகளின் கைகள் உள்ள நிலை, இந்த குழப்பத்தை ஏற்படுத்தி இருக்கலாம். எனினும் நாங்கள் சுட்டிக்காட்டியும், நிர்வாகம் திருத்தவில்லை.அதனால், இந்த முறை மூவர் முதலிகள் உற்வசத்தில், சுந்தரருக்கு பதில், சேரமான் பெருமாள் வீதியுலா சென்றார். சிலை கணக்கெடுப்பின் போது, தகுந்த நிபுணர்களை வைத்து கணக்கெடுப்பதில்லை. கடை நிலை ஊழியர்கள் மூலம் கணக்கெடுத்தால் இப்படித் தான். கோவிலின் உயர் பொறுப்பிற்கு வருபவர்களும், இதுகுறித்த அடிப்படை அறிவு கூட இல்லாமல் தான் வருகின்றனர். அடுத்த உற்சவத்திற்குள் இந்த குழப்பம் தீர்க்கப்பட வேண்டும். ஏனெனில், ஆடி மாதம், சுந்தரர் குருபூஜை நடக்க உள்ளது. அதில், சுந்தரர் யானை வாகனத்திலும்; சேரமான், குதிரை வாகனத்திலும் வீதியுலா வருவர். அப்போதும் இந்த குழப்பம் தொடரக் கூடாது. இதுபோன்ற குழப்பங்களுக்கு கோவிலில்உள்ள சில பட்டர்கள் துணை போவது தான் வருத்தம் தருகிறது.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
சுந்தரர், சேரமான்என்ன வித்தியாசம்?: சுந்தர மூர்த்தி நாயனாரின் இடது கை, பிரலம்ப முத்திரை என்ற நிலையில் இருக்கும். அதாவது, ஒரு காளை அல்லது கன்றின் மீது, ஒருவர் இடது கையை வைத்து ஒய்யாரமாக சாய்ந்து நிற்கும் நிலை. அவரது வலது கை, கடக முத்திரையில் இருக்கும். சுந்தரர் தன் கையில் சாட்டை வடிவில், செண்டு என்ற ஆயுதத்தை வைத்திருப்பார். அதை பிடிப்பதற்கு ஏற்ற வகையில், அந்த முத்திரை இருக்கும். இந்த தோற்றத்தை, மன்னார்கோவில் ராஜ கோபாலசுவாமி, திருவீழிமிழலை மாப்பிள்ளை சுவாமி, ரிஷபாந்திகர் ஆகிய உற்வச திருமேனிகளில் காணலாம். சேரமான் பெருமாள் நாயனார், மன்னராக இருந்தவர். அதனால், அவரது இடது கை, வில் பிடிக்கும் பாணியில் இருக்கும். அதை, வில்லேந்திய கரம் என்பர். வலது கை கடக முத்திரையில் இருக்கும். அது அம்பை பிடிப்பதற்கு ஏற்றபடி அமைக்கப்பட்டிருக்கும். இந்த தோற்றத்தை, பொதுவாக, ராமர் மற்றும் வில்லேந்திய முருகன் சிலைகளில் காணலாம்.இது குறித்து விளக்கம் கேட்க கோவில் நிர்வாகத்தினரை மொபைல் போனில் தொடர்பு கொண்ட போது, அவர்கள் பதிலளிக்கவில்லை.
- நமது சிறப்பு நிருபர் -