ஸ்ரீவி.,சிவன் கோவில் தலபுராணம் வெளியீடு
ADDED :3453 days ago
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் மடவார்வளாகம் வைத்தியநாதசுவாமி திருக்கோயிலில் தலபுராண புத்தக 6 வது பதிப்பு வெளியீட்டு விழா நடந்தது. சுவாமி சன்னிதியில் ரகுபட்டர் சிறப்பு பூஜைகள் செய்ய, சிவனடியார் ராமர் தலைமையில் திரளான சிவனடியார்கள் கோயில் மாடவீதிகள் சுற்றி வந்தனர். புலவர் பாலகிருஷ்ணன் புத்தகத்தை வெளியிட, ரகுபட்டர் மற்றும் பக்தர்கள் பெற்றுகொண்டனர். புத்தக வெளியிடஉதவிகரமாக இருந்த தக்கார் ராமராஜா, செயல்அலுவலர் நாராயணி மற்றும் கோயில் அலுவலர்களுக்கு பக்தர்கள் நன்றி தெரிவித்தனர்.