உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நல்லூரில் 6 கோவில்களில் கும்பாபிஷேகம்!

நல்லூரில் 6 கோவில்களில் கும்பாபிஷேகம்!

திருபவுனை: திருபுவனை அடுத்த நல்லுார் கிராமத்தில் விநாயகர், பாலமுருகன், காளிகா தேவி, ஐயனாரப்பன், கலியுக பெருமாள் மற்றும் மாரியம்மன் ஆகிய 6 கோவில்களின் கும்பாபிஷேக விழா இன்று 8ம் தேதி நடக்கிறது. புதுச்சேரி மண்ணாடிப்பட்டு கொம்யூன் நல்லுார் கிராமத்தில் பழமையான விநாயகர் கோவில், முருகன், காளிகா தேவி, ஐயனாரப்பன் ஆகிய கோவில்கள் பல லட்சம் ரூபாய் செலவில் புதுப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் ஐயனாரப்பன் கோவில் வளாகத்தில் மாரியம்மன் சன்னதியும், கருடாழ்வார், ஆஞ்சநேயர் மற்றும் கலியுக பெருமாள் சிலைகளும் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ளது. ஏரிக்கரையில் உள்ள காளியம்மன் கோவில் வளாகத்தில் வீரன் சன்னதியும் புதிதாக நிர்மானிக்கப்பட்டுள்ளது. இக்கோவில்களின் கும்பாபிஷேக விழா இன்று 8ம் தேதி 9 மணிக்கு தொடங்கி 10.30 மணிக்கு நடைபெற உள்ளது. விழாவிற்கான ஏற்பாடுகளை ஆலய நிர்வாகிகள், இளைஞர்கள் மற்றும் கிராம பொதுமக்கள் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !