திரவுபதியம்மன் கோவிலில் அர்ச்சுனன் தபசு!
ADDED :3453 days ago
ஆர்.கே.பேட்டை: திரவுபதியம்மன் கோவிலில், அக்னி வசந்த உற்சவத்தில், நேற்று முன்தினம் அர்ச்சுனன் தபசு நிகழ்ச்சி நடைபெற்றது. ஆர்.கே.பேட்டை அடுத்த, செல்லாத்துார், திரவுபதியம்மன் கோவிலில், அக்னி வசந்த உற்சவம், கடந்த 26ம் தேதி, ஜெயக்கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து தினசரி மகாபாரத சொற்பொழிவும், தெருக்கூத்து நிகழ்ச்சிகளும் நடந்து வருகின்றன. நேற்று முன்தினம் மாலை, தெருக்கூத்து கலைஞர்களால், அர்ச்சுனன் தபசு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. மாலை 6:00 மணியளவில், கோவில் வளாகத்தில் நடப்பட்டிருந்த பனை மரத்தின் உச்சியில் அமர்ந்து அர்ச்சுனன் தபசு மேற்கொண்டான். உடன், பக்தர்கள் பலரும் இணைந்து வேண்டுதலில் ஈடுபட்டனர். தபசின் நிறைவாக, பக்தர்களுக்கு மலர்கள் மற்றும் பழங்களை, பிரசாதமாக, அர்ச்சுனன் வழங்கினார்.