உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிதம்பரம் திரவுபதியம்மன் கோவிலில் தீமிதி உற்சவம்!

சிதம்பரம் திரவுபதியம்மன் கோவிலில் தீமிதி உற்சவம்!

சிதம்பரம்: சிதம்பரம் திரவுபதி அம்மன் கோவில் வைகாசி பெருவிழா தீமிதி உற்சவத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.  சிதம்பரத்தில்   பிரசித்தி பெற்ற சிதம்பரம் திரவுபதியம்மன் கோவிலில் 28ம் ஆண்டு வைகாசி பெருவிழா கடந்த 27ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினம்   திரவுபதியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை, வழிபாடு நடந்தது. நேற்று முன்தினம் மாலை தீமிதி உற்சவம் நடந்தது.   இதனையொட்டி திரவுபதியம்மனுக்கு காலை சிறப்பு  அபிஷேக, அலங்காரம், தீபாராதனை நடந்தது. அம்மன் மகா மண்டபத்தில் எழுந்தருளி   பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் அம்மனை தரிசனம் செய்தனர்.  மாலை தீக்குண்டத்தில் இறங்கி ஆயிரக்கணக்கான பக்தர்கள்   நேர்த்திக் கடன் செலுத்தினர். ஏற்பாடுகளை கோவில் டிரஸ்டி கவன்சிலர் ரமேஷ் மற்றும் சிதம்பரம் நகர மக்கள் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !