ஆணையூர் சித்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்
அன்னுார்: ஆணையூர் சித்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழாவில், பல ஆயிரம் பேர் பங்கேற்றனர். குப்பனுார் ஊராட்சி ஆணையூரில், கண் தந்த சித்தி விநாயகர் கோவில் உள்ளது. இக்கோவிலில், புதிதாக தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், சிவ துர்க்கையம்மன், கன்னி மூல கணபதி மற்றும் நவகிரக தெய்வங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டு, திருப்பணிகள் செய்யப்பட்டன. இதையடுத்து, கும்பாபிஷேக விழா, 7ம் தேதி காலை விநாயகர் வழிபாடுடன் துவங்கியது. மாலையில் முதற்கால யாக பூஜை நடந்தது. நேற்று காலை, 7:00 மணிக்கு யாகசாலை பூஜை நடந்தது. 108 வகை திரவியங்கள் சமர்ப்பிக்கப்பட்டன. காலையில், விநாயகர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு, புனித நீர் ஊற்றி, கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் கர்நாடக மாநிலம், மாண்டியா மாவட்டம், மகா சமஸ்தான மடத்தின் நிர்மலானந்த நாத சாமி, சாந்தா மல்லிகார்ஜூன சிவாச்சாரியார் பேசினர். மதியம், அன்னதானம் வழங்கப்பட்டது. அன்னுார், சிறுமுகை, மேட்டுப்பாளையம் பகுதியிலிருந்து திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.