உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தோடர் கோவில் புனரமைப்பு: பாரம்பரிய இசையுடன் நடனம்!

தோடர் கோவில் புனரமைப்பு: பாரம்பரிய இசையுடன் நடனம்!

ஊட்டி: ஊட்டி கிர்சாஸ் மந்து பகுதியில் உள்ள தோடரின கோவில், புனரமைக்கப்பட்டது. நீலகிரியில் வாழும், தோடர் இன பழங்குடியின மக்கள்,  எருமை வளர்ப்பு, இயற்கை வழிபாடை பாரம்பரியமாக கொண்டுள்ளனர். இதில், கார்டன் மந்து மக்களால், கிர்சாஸ்’ மந்து பகுதியில் உள்ள ÷ காவில், பல ஆண்டுகளுக்கு பின்பு, நேற்று அவர்களுக்கே உரிய சாஸ்திர, சம்பிரதாயத்துடன் முழுக்க புதுப்பிக்கப்பட்டது. தோடரின மக்கள்,  பாரம்பரியமாக பயன்படுத்தி வரும் பிரம்பு, புற்களை கொண்டு, கோவிலை புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டனர். கார்டன் மந்து தலைவர் பீட்டர் ராஜ்  தலைமையில் நடந்த நிகழ்ச்சியில், மாவட்டத்தின் பல இடங்களில் உள்ள தோடர் மந்தில் வசிக்கும் மக்கள் பங்கேற்றனர். பாரம்பரிய தானிய  உணவுகளை உண்டு, பாரம்பரிய இசையுடன் நடனமாடி உற்சாகப்பட்டு கொண்டனர். தோடர் இனத்தைச் சேர்ந்த மணிகண்டன் கூறியதாவது; இக்÷ காவில், ஆண்டில், பிப்ரவரி - மே வரை, மூன்று மாதங்கள் மட்டும் திறந்திருக்கும். அந்த சமயத்தில், எருமைகளை அழைத்துச் சென்று, பூஜை செய் வதை தோடரின மக்கள் வழக்கமாக கொண்டிருப்பர். கடந்த, பல ஆண்டுகளாக இக்கோவில் புனரமைக்கப்படவில்லை.  தற்போது, பாரம்பரியமாக  பயன்படுத்தும் பிரம்பு, புற்களை கொண்டு, அனைத்து மந்துகளில் வாழும் தோடரின மக்களும் கோவில் புனரமைப்பு பணியில் ஈடுபட்டு வரு கின்றனர். மேலும், இயற்கையை பாதுகாக்க வேண்டும் என்ற கருத்தை மையப்படுத்தி சாமை உட்பட தானியப் பயிர்கள் மூலம் தயாரிக்கப்படும்  உணவை உண்பர். இவ்வாறு, மணிகண்டன் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !