காரைக்கால் பிரத்தியங்கிரா கோவில் கும்பாபிஷேகம்
காரைக்கால்: காரைக்கால் வரிச்சிக்குடி கிராமத்தில் மகா பிரத்தியங்கிரா தேவி, மகா வாராஹி அம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம் நடந்தது. காரைக்கால் கோட்டுச்சேரி அடுத்த வரிச்சிக்குடி கிராமத்தில், மகா பிரத்தியங்கிரா தேவி, மகா வாராஹி அம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம் ÷ நற்று காலை நடந்தது. இக்கோவிலில் சிம்ம கணபதி, வராஹி தேவி, மகா பிரத்தியங்கிரா தேவி, சூலினி துர்கா, கால பைரவர் உள்ளிட்ட சுவாமிகளுக்கு தனித்தனியாக சன்னிதி அமைக்கப்பட்டது. மகா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, கடந்த 6ம் தேதி, விக்னேஸ்வர பூஜை, நவக்கிர ÷ ஹாமமும், கடந்த 7ம் தேதி சாந்தி ஹோமம் மற்றும் திசா ஹோமமும், நடந்தது. நேற்று முன்தினம், யாக பூஜைகள் ஹோமங்கள் அஷ்டபந்தன ம ருந்து சாத்துதல் நடந்தது. நேற்று, கடம் புறப்பாடு மற்றும் அனைத்து விமானங்கள் கும்பாபிஷேகம் நடந்தது. கோவில் நிர்வாக அறங்காவலர்கள் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.