பில்லுார் கலிவுராய ஐயனாரப்பன் கோவிலில் மகா கும்பாபிஷேகம்
விழுப்புரம்: விழுப்புரம் அடுத்த பில்லுார் கலிவுராய ஐயனாரப்பன் கோவிலில் மகா கும்பாபிஷேகம் நடந்தது. பில்லுார் வலம்புரி விநாயகர், மு ருகன், பூரணி புஷ்கலா சமேத கலிவுராய ஐயனாரப்பன், விசாலாட்சி சமேத விஸ்வநாத சுவாமி, மாரியம்மன், பிடாரியம்மன், திரவுபதியம்மன், க ங்கையம்மன், அங்காளபரமேஸ்வரி அம்மன், ஐயப்பன் மற்றும் பரிவார தேவதைகளுக்கு கும்பாபிஷேக விழா நடந்தது. விழாவையொட்டி, நேற்று அதிகாலை 5:00 மணிக்கு வேதபாராயணம், நான்காம் கால யாக சாலை பூஜை, நாடிசந்தனம், கலசங்கள் புறப்பாடு நடந்தது. பின்னர், காலை 9:00 மணிக்கு விநாயகர், முருகன், விசாலாட்சி சமேத விஸ்வநாதர், மாரியம்மன், பிடாரியம்மன், திரவுபதியம்மன், கங்கையம்மன், அங்காளபர÷ மஸ்வரியம்மன், ஐயப்பன் கோபுர விமானங்கள் மற்றும் மூலஸ்தானத்திற்கு கும்பாபிஷேகம் நடந்தது. காலை 10:30 மணிக்கு பூரணி புஷ்கலா சமேத கலிவுராய ஐயனாரப்பன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம் நடந்தது. நிகழ்ச்சியில், விழாக்குழு தலைவர் கலிவு உடையார், ÷ காவில் நிர்வாகிகள் ராமசாமி, சுப்ராயன், கருணாமூர்த்தி, சந்திரசேகர், ஜோதி, செல்வக்குமார், வெங்கடாஜலம், முருகன், பார்த்திபன், அய்யப்பன், புண்ணியமூர்த்தி, தணிகைவேலன் மற்றும் பலர் பங்கேற்றனர்.