தேவி கருமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்
ADDED :5140 days ago
ஸ்ரீமுஷ்ணம் : ஸ்ரீமுஷ்ணம் தேவி கருமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. ஸ்ரீமுஷ்ணம் பழைய ஆஸ்பத்திரி தெருவில் இருக்கும் ஸ்ரீதேவி கருமாரி அம்மன் கோவில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நேற்று காலை நடந்தது. விழாவையொட்டி கடந்த 7 ந் தேதி காலை கணபதி ஹோமம் நவக்கிரக ஹோமம் நடந்தது. மாலையில் மிருத்சங்கிரகணம், அங்குரார்ப்பணம், பூர்ணாஹூதி தீபாராதனை நடந்தது. நேற்று காலை கோ பூஜை, இண்டாம் கால யாக பூஜை நடந்து. தொடர்ந்து 8.30 மணிக்கு அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடந்தது. இதனைத்தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்து சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். ரவிசுந்தர் சிவாச்சாரியார் கும்பாபிஷேகத்தை நடத்தினார். விழா ஏற்பாடுகளை பழைய ஆஸ்பத்திரி தெரு முக்கிய பிரமுகர்கள் செய்திருந்தனர்.