திருமுண்டீச்சரம் கோவிலில் மகா கும்பாபிஷேக விழா
ADDED :5140 days ago
திருவெண்ணெய்நல்லூர் : திருமுண்டீச்சரம் பங்கஜவள்ளி சமேத ஆதிகேசவப்பெருமாள் கோவில் கும் பாபிஷேகம் நடந்தது. இக்கோவில், 40 லட்சம் ரூபாய் மதிப்பில் சீரமைக்கப்பட்டு, நேற்று காலை மகா கும்பாபிஷேகம் நடந்தது. அதிகாலை 5 மணிக்கு விஸ்வரூபம், புண்யாகம், ஹோமம், மகாபூர்ணாஹூதி, யாத்ராதானம் நடந்தது. காலை 8.35 மணிக்கு யாகசாலையிலிருந்து கடங்கள் புறப்பாடாகி 8.50 மணிக்கு ஆதிகேசவப் பெருமாள், பிரம்மா, ஆஞ்சநேயர் கோவில்களில் மகா கும்பாபிஷேகம் நடந்தது. சர்வசாதகத்தை சவும்யபட்டாச்சாரியார் செய்தார். இரவு 7 மணிக்கு திருக் கல்யாணம் நடந்தது. விழா ஏற்பாடுகளை கோவில் செயல்அலுவலர் கலைவாணன், சேர்மன் வசந்திபாண்டியன், ஊராட்சி தலைவர் முருகானந்தம் மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர்.