உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பஞ்சவடீ ஆஞ்ஜநேயர் கோவிலில் மருத்துவமனை கட்டட திறப்பு விழா!

பஞ்சவடீ ஆஞ்ஜநேயர் கோவிலில் மருத்துவமனை கட்டட திறப்பு விழா!

புதுச்சேரி: பஞ்சவடீ ஆஞ்ஜநேயர் கோவிலில் புதிதாக அமைக்கப்பட்ட வேதபாட சாலை மற்றும் மருத்துவமனை கட்டட திறப்பு விழா நேற்று நடந் தது. புதுச்சேரி–திண்டிவனம் சாலையில் அமைந்துள்ள பஞ்சவடீ ஆஞ்ஜநேயர் கோவிலில்,  2007ம் ஆண்டு முதல் பிரதி ஞாயிறுதோறும் மருத்துவ  முகாம் நடத்தப்பட்டு வருகிறது.  மாதம் இருமுறை சிறப்பு மருத்துவ முகாம்களும் நடத்தப்படுகிறது. அனைத்து நோயாளிகளுக்கும் மருத்துவ பரி÷ சாதனை மற்றும்  மருந்துகள் இலவசமாக வழங்கப்படுவதால் பொதுமக்கள் பயனடைந்து வருகின்றனர். இந்நிலையில், பஞ்சவடீ ஆஞ்ஜநேயர் ÷ காவில் வளாகத்தில், மருத்துவமனை  மற்றும் வேதபாடசாலைக்கு புதிய  கட்டடம் கட்டப்பட்டு, திறப்பு விழா நடந்தது. வேதபாடசாலை மற்றும்  இலவச மருத்துவமனை, பஞ்சமுக ஸ்ரீ ஜெயமாருதி சாரிட்டபிள் டிரஸ்டின் மூலம் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டது. பஞ்சமுக ஸ்ரீ ஜெ யமாருதி சேவா மற்றும் சாரிட்டபிள்  டிரஸ்ட் நிர்வாக அறங்காவலர் கோதண்டராமன், செயலாளர் நரசிம்மன்,  அறங்காவலர் திருமலை ஆகியோர்,  புதிய கட்டடத்தை திறந்து வைத்தனர். நிகழ்ச்சியில் அறங்காவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !