சூணாம்பேடு விநாயகர் கோவிலில் கும்பாபிஷேகம்
ADDED :3447 days ago
சூணாம்பேடு: சூணாம்பேடு அடுத்த தாங்கல் சக்தி விநாயகர் திருக்கோவில் கும்பாபிஷேகம் விமரிசையாக நடைபெற்றது. செய்யூர் தாலுகா தாங்கல் கிராமத்தில் அமைந்துள்ள சக்தி விநாயகர் கோவிலில், மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதை முன்னிட்டு, 8ம் தேதி முதல் பல விதமான வழிபாடுகள், அன்னதானம், பட்டிமன்றம் நடைபெற்றது. காலை, 10:00 மணிக்கு கோபுரம் கும்பாபிஷேகம் நடைபெற்றது.இந்த நிகழ்ச்சியில், சூணாம்பேடு, வெண்ணாங்குப்பட்டு, சுற்று வட்டார பகுதிகளைச் சார்ந்த பக்தர்கள் பெரும்திரளாக கலந்து கொண்டனர்.