சோழவந்தான் கோயிலில் வைகாசி திருவிழா பூப்பல்லக்கு!
ADDED :3447 days ago
தென்கரை: சோழவந்தான் தென்கரை உச்சிமாகாளியம்மன் கோயில் வைகாசி திருவிழாவில் அம்மன் பூப்பல்லக்கில் எழுந்தருளினார். ஜூன் 1ல் கொடியேற்றத்துடன் திருவிழா துவங்கியது. பக்தர்கள் காப்புக்கட்டி பால்குடம், அக்னிச்சட்டி எடுத்து அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர். நேற்று முன் தினம் பக்தர்கள் மாவிளக்கு ஏற்றி, முளைப்பாரி எடுத்து பூஜை செய்தனர். இரவு பூப்பல்லக்கில் அம்மன் எழுந்தருளினார். விழா ஏற்பாடுகளை திருவிழாக் குழுவினர் செய்திருந்தனர்.