திருப்பரங்குன்றம் கோயிலில் ஊஞ்சல் திருவிழா துவங்கியது!
ADDED :3588 days ago
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆனி ஊஞ்சல் திருவிழா நேற்று துவங்கியது. உற்சவர் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானைக்கு சிறப்பு அலங்காரமாகி ஆஸ்தான மண்டபத்தை வலம்வந்து திருவாட்சி மண்டபத்தில் அமைக்கப்பட்டிருந்த ஊஞ்சலில் எழுந்தருளினர். அங்கு கோயில் ஓதுவார்களால் தேவாரம் பாடப்பட்டு, 30 நிமிடங்கள் சுவாமி ஊஞ்சல் ஆடும் நிகழ்ச்சி முடிந்து தீபாராதனை நடந்தது. ஜூன் 18 வரை ஊஞ்சல் விழா நடக்கும்.
முப்பழ பூஜை: முக்கிய நிகழ்ச்சியாக ஜூன் 19ல் மூலவர்கள் சுப்பிர மணிய சுவாமி, துர்க்கை அம்மன், கற்பக விநாயகர், சத்தியகிரீஸ்வரர், பவளக்கனிவாய் பெருமாள், கோவர்த்தனாம்பிகை அம்பாள், உற்சவர் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை மற்றும் பரிவார மூர்த்திகள் சன்னதிகளில் மா, பலா, வாழைப்பழங்கள் படைக்கப்பட்டு பூஜைகள் நடக்கும்.