சங்கராபுரம் நகரில் கும்பாபிஷேக விழா
ADDED :3445 days ago
சங்கராபுரம்: சங்கராபுரத்தில் இரண்டு கோவில்களில் கும்பாபிஷேகம் நடந்தது. சங்கராபுரம் கடைவீதி சக்தி விநாயகர் கோவில் ரு.10 லட்சம் ரூபாய் செலவில், புணரமைக்கபட்டு கும்பாபிஷேகம் நடந்தது. இதையொட்டி கணபதி பூஜை, கோ பூஜை, வாஸ்து பூஜை மற்றும் யாக வேள்வி பூஜைகள் நடந்தது. பின்னர் கடம் புறப்பாடு, வினாயகர் கோவில் உயர் கோபுரத்தில் குடமுழுக்கும், புதிதாக பிரதிஷ்டை செய்யப்பட்ட வினாயகர், மகாலஷ்மி, சரஸ்வதி ஆகிய மூலவர்களுக்கு சிவாச்சாரியார்கள் கும்பாபிஷேகம் செய்து ைவத்தனர். இதே போல் சங்கராபுரம் ஆற்றுபாதை தெருவில் கெ ங்கையம்மன் கோவிலில், மகா கும்பாபிஷேகம் நடந்தது. இரு ேகாவில் கும்பாபிஷேக ஏற்பாடுகளை, விழா கமிட்டி தலைவர் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோர் செய்திருந்தனர்.