புற்று மாரியம்மன் கோவிலில் வைகாசி விசாக விழா!
ADDED :3445 days ago
மந்தாரக்குப்பம்: மேல்பாப்பனம்பட்டு புற்று மாரியம்மன் கோவில் வைகாசி விசாக திருவிழாவில், ஏராளமானோர் செடல் அணிந்து நேர்த்திக் கடன் செலுத்தினர். மந்தாரக்குப்பம் அடுத்த மேல்பாதி, மேல்பாப்பனம்பட்டு புற்று மாரியம்மன் கோவிலில், வைகாசி விசாக மூன்று நாள் திருவிழா நேற்று காப்புக் கட்டும் நிகழ்ச்சியுடன் துவங்கியது. காலையில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. பகல் 1:00 மணியளவில் பால்குடம், கரகம் சுமந்து, அம்மன் வேடத்தில் செடலணிந்து ஏராளமானோர் நேர்த்திக்கடன் செலுத்தினர். தொடர்ந்து, ஊரணி பொங்கல், தீச்சட்டி உற்சவம் நடந்தது. இரவு அம்மன் வீதியுலா வந்து அருள் பாலித்தார்.