உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மாரியம்மன் கோவில் விழா: அக்னி சட்டி எடுத்து நேர்த்தி

மாரியம்மன் கோவில் விழா: அக்னி சட்டி எடுத்து நேர்த்தி

குளித்தலை: வத்தப்பிள்ளையூர் மாரியம்மன் கோவில் திருவிழாவில், அக்னி சட்டி எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செய்தனர். கரூர் மாவட்டம், குளித்தலை அடுத்த, நாகனூர் ஊராட்சிக்கு உட்பட்ட வத்தப்பிள்ளையூரில், விநாயகர், மாரியம்மன், காளியம்மன் மற்றும் முனியப்பன் கோவில்கள் உள்ளது. ஆண்டுகள் தோறும் இக்கோவில்களுக்கு திருவிழா நடத்துவது வழக்கம். அதே போன்று, இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த வாரம் காப்புக்கட்டுதலுடன் துவங்கியது. முதல் நாள் விழாவில் காவிரியாற்றில் இருந்து புண்ணிய தீர்த்தம் மற்றும் பால்குடம் எடுத்து வந்து, விநாயகர், மாரியம்மன், காளியம்மன் மற்றும் முனியப்பன் சுவாமிகளுக்கு பக்தர்கள் சிறப்பு பூஜை செய்து வழிபட்டனர். அன்று இரவு, முனியப்பன் கோவில் அருகில் உள்ள கிணற்று பகுதியில் இருந்து மாரியம்மன் மற்றும் காளியம்மனுக்கு கரகம் பாலிக்கப்பட்டு, தாரை தப்பட்டை முழங்க வாண வேடிக்கையுடன், சுவாமி வீதி உலா வந்து கோவிலில் குடிபுகுந்தது. தொடர்ந்து, பொங்கல், மாவிளக்கு, கிடா வெட்டி வழிபாடு, முனியப்பன் கோவில் அருகில் இருந்து அக்னி சட்டி மற்றும் அலகு குத்திக்கொண்டு நேர்த்தி, மஞ்சள் நீராட்டு உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பக்தர்கள் பங்கேற்று, விழாவை கொண்டாடினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !