கோதண்டராமர் கோவிலில் ராம பஜனை நிகழ்ச்சி
ADDED :3441 days ago
செஞ்சி: செஞ்சி கோதண்டராமர் கோவிலில், வைகாசி மாத ராம பஜனை நடந்தது. விழுப்புரம் மாவட்டம், செஞ்சி சங்கராபரணி ஆற்றங்கரையில் உள்ள கிருஷ்ணவேணி தாயார் சமேத பிரசன்ன வெங்கடேச பெருமாள், கோதண்டராமர் கோவிலில், வைகாசி மாத ராம பஜனை நடந்தது. ஜெய ராமன் தலைமை தாங்கினார். ராமமூர்த்தி திருமால் வணக்கம் பாடினார். கோதண்டராமர் கோவில் அறக்கட்டளை நிர்வாகி ரங்கராமானுஜம் முன்னிலை வகித்தார். ஜனார்த்தனன், தாமோதரன், சுந்தரன் சிறப்புரை நிகழ்த்தினர். சாமிக்கண்ணு, அரங்கன், எட்டியா பிள்ளை, பத்மநாபன், உபய தாரர் ரமணி, கவிதா மற்றும் பல்வேறு கிராமங்களை சேர்ந்த பஜனை கோஷ்டியினர் கலந்து கொண்டனர். நடுப்பட்டு புருஷோத்தமன் குழுவினரின் வில்லுப்பாட்டு மற்றும் பஜனை நடந்தது. கோபண்ணா கிருஷ்ணவேணி நன்றி கூறினார்.