ஒரே நாளில்.. திருப்பதி வசூல் ரூ.3.87 கோடி!
ADDED :3419 days ago
திருப்பதி: திருமலையில், ஒரே நாளில் உண்டியல் காணிக்கை மூலம், 3.87 கோடி ரூபாய் வசூலானது.திருமலை தேவஸ்தானம், காணிக்கையை தினமும் கணக்கிட்டு, வங்கியில் வரவு வைக்கும். அதன்படி, கடந்த ஞாயிறு மாலை முதல், திங்கள் மாலை வரையிலான, உண்டியல் காணிக்கையை கணக்கிட்டதில், 3.87 கோடி ரூபாய் வசூலாகி உள்ளதாக, தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.