உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / உடுமலை சீனிவாச பெருமாள் கோவில் ஆண்டு விழா நிறைவு!

உடுமலை சீனிவாச பெருமாள் கோவில் ஆண்டு விழா நிறைவு!

உடுமலை: சீனிவாச பெருமாளுக்கு சிறப்பு அபிேஷக, ஆராதனைகளுடன் நவநீத கிருஷ்ணன் கோவில், நான்காம் ஆண்டுவிழா நிறைவு பெற்றது.  உடுமலை, நவநீத கிருஷ்ணன் கோவிலில் நான்காம் ஆண்டுவிழா, நான்கு நாட்கள் நடந்தது. கடந்த 10ம் தேதி முதல், நேற்று வரை மாலையில்  நாலாயிர திவ்ய பிரபந்த சேவையும், சுவாமிக்கு சிறப்பு அலங்காரமும் நடந்தது. நிறைவு நாளான நேற்று காலை கணபதி ஹோமமும், காலை, 9:00  மணி முதல், 12:00 மணி வரை, கலசஸ்தாபன, அக்னி பிரதிஷ்டை, விசேஷ திருமஞ்சனம், சிறப்பு அலங்காரம், தளிகை அம்சை சாத்துமறை  வைபவம் நடந்தன. மதியம் சீனிவாச பெருமாளுக்கு சிறப்பு அபிேஷகம், அலங்கார மற்றும் ஆராதனை இடம்பெற்றது. சீதேவி, பூதேவி சமேதர ருடன் சீனிவாச பெருமாள் மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !