உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பார்வையாளர்களை கவரும் ஆன்மீக ஓவியங்கள்!

பார்வையாளர்களை கவரும் ஆன்மீக ஓவியங்கள்!

சென்னை: ஆழ்வார்பேட்டை, சி.பி.ஆர்ட் மையத்தில் நடந்து வரும் ஆன்மிக ஓவியங்களின் கண்காட்சி, பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. கர்நாடக மாநிலத்தின் பிரசித்தி பெற்ற மைசூர் பாரம்பரிய கலைப் பள்ளி சார்பில் ஆன்மிக ஓவியக் கண்காட்சி சென்னை, ஆழ்வார்பேட்டை, சி.பி.ஆர்ட் மையத்தில் நடந்து வருகிறது. கர்நாடக மாநில ஓவியர்கள் ராம்கிருஷ்ணா, ஸ்ரீஹரி, தினேஷ் ஆகியோரது கைவண்ணத்தில் உருவான, வாட்டர் கலர் வெஜிடபுள் ஓவியங்கள் கண்காட்சியில் இடம் பெற்றுள்ளன. குறிப்பாக, ருக்மணி கல்யாணம், மகாபாரதம், ஸ்ரீனிவாச கல்யாணம், கிரிஜா கல்யாணம், ராம் தர்பார், விஸ்வரூப தரிசனம் ஆகியவை பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்து வருகின்றன. கண்காட்சியில் இடம் பெற்றுள்ள ஓவியங்களுக்கு 12 ஆயிரம் ரூபாய் முதல் 2.5 லட்சம் ரூபாய் வரை விலை நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. வரும் 18ம் தேதி வரை நடத்தப்படும் இக்கண்காட்சியில், தினமும் காலை, 10:00 மணி முதல் இரவு, 8:00 மணி வரை பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவர். கண்காட்சியில், 10 சதவீத தள்ளுபடியில் ஓவியங்கள் விற்கப்படுகின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !