உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மேல்நாரியப்பனுார் தேவாலயத்தில் புனித அந்தோணியார் தேர் திருவிழா!

மேல்நாரியப்பனுார் தேவாலயத்தில் புனித அந்தோணியார் தேர் திருவிழா!

சின்னசேலம்: மேல்நாரியப்பனுார் புனித அந்தோணியார் தேர்திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று, வழிபட்டனர்.  சின்னசேலம்  அடுத்த மேல்நாரியப்பனுார் புனித அந்தோணியார் கோவில், தேர் திருவிழா பவனியை கடந்த 5ம் தேதி ஆயர் சிங்கராயன் கொடியேற்றி துவக்கி  வைத்தார்.  நாள்தோறும் திருப்பலி பூஜை, வழிபாடு, தேர்பவனி, சொற்பொழிவு நிகழ்ச்சி நடந்தது. இதில் பங்கு தந்தைகள் அந்தோணி ஆனந்தராய ர், சவரிமுத்து, லுார்து ஜெயசீலன், சகாயராஜ், ஆரோக்கியசாமி, அற்புதராஜ் உட்பட பலர் பங்கேற்றனர்.  நேற்று முன்தினம், இரவு 11:30 மணிக்கு  வானவேடிக்கையுடன் சின்ன தேர்பவனி மற்றும் பெரிய தேர்பவனி நிகழ்ச்சி நடந்தது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள், பங்கேற்று வழிபட்டனர்.  விழுப்புரம், சேலம் ஆகிய மாவட்டங்களிலிருந்து அரசு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. சென்னை,  பெங்களூரூ செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில்கள், திருவிழா நாட்களில் மேல்நாரியப்பனுார் ரயில்வே ஸ்டேஷனில் நிறுத்தப்பட்டன. கள்ளக்குறிச்சி  டி.எஸ்.பி., மதிவாணன் தலைமையிலான  போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.  மேல்நாரியப்பனுார் திருத்தல பங்கு தந்தை பால்ராஜ், ÷ நற்று கொடியிறக்கம் செய்து வைத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !