கங்கை அம்மன் கோவிலில் கூழ்வார்த்தல் விழா சிறப்பு
ADDED :3413 days ago
திருப்போரூர்: திருப்போரூரில் அமைந்துள்ள, கங்கை அம்மன் கோவிலில், கூழ்வார்த்தல் விழா நடைபெற்றது. திருப்போரூரில், திருவஞ்சாவடி தெருவில், பழமை வாய்ந்த கங்கை அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி மாதத்தில் கூழ்வார்த்தல் விழா நடைபெறுவது வழக்கம். அதுபோல், இந்த ஆண்டும், அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், தீபாராதனையும் நடைபெற்றது. பின், பகல், 12.00 மணிக்கு கூழ்வார்த்தல் நிகழ்ச்சியும், மாலை, 6.00 மணிக்கு அம்மன் வீதியுலாவும், இரவு, 8.00 மணிக்கு கும்பம் படைத்தலும் நடைபெற்றது. விழாவில், ஏராளமான உள்ளூர் வாசிகள் பங்கேற்று, அம்மனை வழிபட்டனர்.