கோவிலை மறைக்கும் பதாகைகள்: மாமல்லபுரம் பக்தர்கள் கோபம்!
மாமல்லபுரம்: மாமல்லபுரம், ஸ்தலசயன பெருமாள் கோவில் நுழைவாயில் பகுதியில் வைக்கப்பட்டுள்ள விளம்பர பதாகைகளால், பக்தர்கள் மனவருத்தம் அடைந்து உள்ளனர். மாமல்லபுரம் நகரின் மைய பகுதியில், ஸ்தலசயன பெருமாள் கோவில் உள்ளது. 108 வைணவ தலங்களில் ஒன்றான இக்கோவில், மகப்பேறு, நில பிரச்னை ஆகிய தோஷங்களுக்கான பரிகார தலமாக கருதப்படுகிறது. இந்நிலையில், கோவில் நுழைவாயில் பகுதியில், இயல் மண்டபம், தேரடி ஆகிய பகுதிகளில் வைக்கப்பட்டுள்ள தனியார் மற்றும் உள்ளாட்சி நிர்வாக விளம்பர பதாகைகளால், கோவிலுக்கு வருபவர்கள் முகம் சுழிக்கின்றனர்.
செய்யலாமே!
பழம் பெருமை வாய்ந்த கோவில் இருக்கும் இடமே தெரியாத வகையில், பேருந்துகள், கட்டடங்கள் மறைத்துள்ளன. அவற்றுடன் விளம்பர பதாகைகளும், கோவிலை மறைக்கின்றன. கோவிலின் சிறப்பையும், அதன் தொன்மையையும் பறைசாற்றும் வகையில், பேருந்து நிலையம் அருகே, பெரிய அளவில், கோவிலை மறைக்காத வகையில், விளம்பர பலகை அமைக்கலாம். கோவில் பகுதியில், பதாகைகள் வைப்பதை தடுத்து, கோவில் சார்ந்த பதாகைகள் வைக்க, நிர்வாகம் நடவடிக்கை எடுக்கும். - கோவில் நிர்வாகத்தினர்
கோவிலை சுற்றியுள்ள பதாகைகளால், புனிதமான அந்த பகுதி, அலங்கோலமாக உள்ளது. கோவில் அருகே பதாகைகளுக்கு தடை விதிக்க வேண்டும். - பக்தர்கள், மாமல்லபுரம்.