ஓசூர் கோட்டை மாரியம்மன் அலகு குத்தும் விழா
ADDED :3595 days ago
ஓசூர்: ஓசூர் அடுத்த கெலமங்கலம் அருகே உள்ள காடு உத்தனப்பள்ளி கிராமத்தில், கோட்டை மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில், 2ம் ஆண்டு அலகு குத்தும் விழா நேற்று நடந்தது. விழாவையொட்டி நேற்று அதிகாலை, 4 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. காலை, 6 மணிக்கு, தீமிதித்தல், 9 மணிக்கு, அலகு குத்துதல் நிகழ்ச்சி நடந்தது. அம்மனுக்கு அலகு குத்தியும், பூங்கரகம் எடுத்தும் நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள், காடு உத்தனப்பள்ளி கிராமத்தின் முக்கிய வீதிகளில் ஊர்வலமாக வந்தனர். இதேபோல், கெலமங்கலம் அடுத்த, ஏ.,கொத்தப்பள்ளி கிராமத்தில் உள்ள வால்முகி கோவிலில், மண்டல பூஜை நடந்தது. இந்த இரு விழாக்களில், பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.