கங்கா தசரா திருவிழா: ஹரித்வாரில் புனித நீராடிய பக்தர்கள்!
ADDED :3410 days ago
கங்கை நதி பூமிக்கு வந்த தினமான கங்கா தசரா விழாவையொட்டி, ஆயிரக்கணக்கான பக்தர்கள் கங்கையில் புனித நீராடினர். புனித நதியான கங்கா தேவி பகிரதனின் தவத்தினால் பூலோகத்திற்கு வந்ததாகக் கூறப்படும் வைகாசி மாதத்தின் வளர்பிறை பத்தாம் நாள், கங்கா தசரா விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி, வாரணாசி, ஹரித்வார், கர்முக்தேஷ்வரர் ஆகிய இடங்களில் இத்திருவிழா கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. மேலும், இந்நாளில் கங்கை நதியில் புனித நீராடினால் அனைத்துப் பாவங்களும் நீங்கும் என்பது ஐதீகம். விழாவை முன்னிட்டு நேற்று உத்தரபிரதேச மாநிலம், ஹரித்வாரில் குவிந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள், கங்கை நதியில் புனித நீராடினர்.