அவலூர்பேட்டை வள்ளலார் சபை ஆண்டு விழா
ADDED :3471 days ago
அவலுார்பேட்டை: அவலுார்பேட்டை வள்ளலார் தெய்வஞான சபையில் முதலாம் ஆண்டு விழா நடந்தது. விழாவை முன்னிட்டு காலையில் சன்மார்க்க சங்க கொடியினை சரவணபவன் ஏற்றி வைத்தார். விழுப்புரம் வேளாண் இணை இயக்குனர் ஞானவேல், ஊராட்சி மன்ற தலைவர் கலா ராஜவேலாயுதம், கூட்டுறவு கடன் சங்க தலைவர் அண்ணாமலை முன்னிலை வகித்தனர். திருஅருட்பா இசைநிகழ்ச்சி, சொற்பொழிவு, ராமஜோதியின் அருட்பா இன்னிசை, வள்ளலார் வரலாறு வில்லுபாட்டு, பிற்பகலில் அன்னம்பாலிப்பு, மாலையில் ேஜாதி வழிபாடு உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தன. சபை நிர்வாகிகள் சிதம்பரநாதன், ெஜயராமன், ராதாகிருஷ்ணன், செல்வராஜி, கிராம மக்கள் மற்றும் மார்க்கெட் கமிட்டி வியாபாரிகள் சங்கத்தினர், விழா ஏற்பாட்டினை செய்திருந்தனர். இதில் ரவிச்சந்திரன், தண்டபாணி, ரவிச்சந்திரன், ஜானகிராமன், அண்ணாமலை உட்பட பலர் கலந்து கொண்டனர்.