கணபதி, மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நாளை துவக்கம்
ADDED :3475 days ago
மல்லசமுத்திரம்: பள்ளக்குழி மாரியம்மன், கணபதி கோவில் கும்பாபிஷேக விழா நாளை நடக்கிறது. திருச்செங்கோடு தாலுகா, பள்ளக்குழி அக்ரஹாரம் கிராமம் கணபதி, மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நாளை (ஜூன் 16) நடக்கிறது. இதையொட்டி, நேற்று இரவு, 10 மணிக்கு, கிராம சாந்தி நிகழ்ச்சியுடன் விழா துவங்கியது. இன்று காலை, 6 மணிக்கு மங்கள கணபதி ஹோமம், நவகிரக ஹோமம், லஷ்மி ஹோமம், நடக்கிறது. காலை, 9 மணிக்கு, காவிரியில் இருந்து தீர்த்தம் எடுக்க புறப்படுதல், மாலை, 6 மணிக்கு, விநாயகர் வழிபாடு, முதற்கால யாக பூஜை, கண்திறப்பு, கலசம் வைத்தல், அஷ்டபந்தனம் சாற்றுதல் நடக்கிறது. நாளை (ஜூன் 16) காலை, 5.45 மணிக்கு மேல், இரண்டாம்கால யாக பூஜையும், 9 மணியில் இருந்து, 10 மணிக்குள், கோபுர கலசங்களுக்கு தீர்த்தம் ஊற்றி கும்பாபிஷேகமும் நடக்கிறது.