பழநி மலைக்கோயில், உபகோயில் பூஜை பொருட்கள் வினியோக ஏலம்
பழநி: பழநி மலைக்கோயில் மற்றும் உபகோயில்களில் பூஜைபொருட்கள் வினியோகத்திற்கான ஏலம் நடந்தது. பழநி மலைக்கோயில் தலைமை அலுவலகத்தில் நேற்று டெண்டர்கள் திறப்பு நடந்தது. இணை ஆணையர் ராஜமாணிக்கம் தலைமை வகித்தார். துணை ஆணையர் (பொ) மேனகா, திண்டுக்கல் உதவி ஆணையர் சிவலிங்கம் முன்னிலை வகித்தனர். பஞ்சாமிர்தம் கிப்ட் பாக்ஸ் தயார் செய்ய தேவைப்படும் அட்டைப் பெட்டிகள், நாட்டுச் சர்க்கரையை இயந்திரம் மூலம் சலித்து சுத்தப்படுத்துதல், மலர் மாலை, பூஜைப் பொருட்கள் வினியோகம், மஞ்சள் கலர் பை, எள்ளுப் பொட்டலம் கட்டித் தருவற்கான கூலி, காலிச் சாக்குகள், அட்டைப் பெட்டிகள், மற்றும் மலைக்கோயில் விடலைத் தேங்காய் சேகரிப்பு, திருஆவினன்குடி மற்றும் வனதுர்க்கையம்மன் கோயில்களில் காதுகுத்தும் உரிமை உள்ளிட்ட பல்வேறு இனங்களுக்கு ஏலமிடப்பட உள்ளன. இதற்காக டெண்டர் முறையில் அதிகபட்ச தொகையுள்ள குறிப்பிட்ட நபர்களின் மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளது. அவற்றை பரிசீலனை செய்து உரிமம் வழங்கப்பட உள்ளது. கோயில் அதிகாரி ஒருவர் கூறுகையில்,“ மலைக் கோயில், உபகோயில்களில் பாதுகாப்பு பணிக்கான செக்யூரிட்டி நிறுவனம், பிரசாத ஸ்டால் விற்பனை உரிமம் உள்ளிட்டவற்றுக்கான ஒத்திவைக்கப்பட்ட பொது ஏலம், டெண்டர்கள் ஜூன் 28, 29ல் நடைபெற உள்ளது,”என்றார்.