சுப்பிரமணிய சுவாமி கோவில் கும்பாபிஷேகம்
ADDED :3414 days ago
ப.வேலூர்: ப.வேலூர் அருகே, சுப்பிரமணிய சுவாமி கோவில் கும்பாபிஷேகம் நாளை நடக்கிறது. ப.வேலூர் அடுத்த, திருமலை நாமசமுத்திரம் என்னும் அனிச்சம்பாளையத்தில் உள்ள, சுப்பிரமணிய சுவாமி கோவில் திருப்பணிகள் செய்யப்பட்டு, நாளை (ஜூன் 17) கும்பாபிஷேகம் நடக்கிறது. விழாவை முன்னிட்டு, இன்று அதிகாலை, 4 மணிக்கு மேல், 6 மணிக்குள் கணபதி ஹோமமும், 9 மணிக்கு பக்தர்கள் காவிரியாற்றுக்கு சென்று நீராடி, புனித தீர்த்தம் எடுத்து வரும் நிகழ்ச்சியும் நடக்கிறது. மாலை, 5 மணிக்கு முதற்கால யாக பூஜையும், நாளை அதிகாலை, 3 மணிக்கு இரண்டாம் கால யாகபூஜையும் நடக்கிறது. காலை, 6 மணிக்கு மேல், 7 மணிக்குள் சுப்பிரமணிய சுவாமி கோவில் கும்பாபிஷேகம் நடக்கிறது.