உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருத்தணி கோவில் கடைகள் ஏலம் மீண்டும் ஒத்திவைப்பு

திருத்தணி கோவில் கடைகள் ஏலம் மீண்டும் ஒத்திவைப்பு

திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலின், 12 கடைகள் ஏலம், இரண்டாவது முறையாக ஒத்திவைக்கப்பட்டது. திருத்தணி முருகன் கோவிலில், பக்தர்கள் காணிக்கை செலுத்தும் தலைமுடி, மலைக்கோவிலில் பிரசாத கடை மற்றும் பலவகையான, 15க்கும் மேற்பட்ட கடைகள், ஆண்டுக்கு ஒருமுறை ஏலம் விடப்படுகிறது. அந்த வகையில், இந்தாண்டிற்கான தலைமுடி, பிரசாத கடை மற்றும் கடைகள் ஏலம், கடந்த, 10ம் தேதி ஏலம் நடந்தது. தலைமுடி, பிரசாத கடை மற்றும் மலைக்கோவிலின், 12 கடைகளை ஏலம் யாரும் எடுக்க முன்வராததால், ரத்து செய்து ஒத்திவைக்கப்பட்டது. கோவில் நிர்வாகம், 12 கடைகளுக்கு மட்டும், கடந்த 12ம் தேதி, ஏலம் நடைபெறும் என, அறிவித்திருந்தது. இதற்காக, கோவில் தலைமை அலுவலகத்தில் பெட்டி வைத்து, ஒப்பந்தப்புள்ளி வரவேற்கப்பட்டது. ஆனால், யாரும் ஏலம் எடுக்காததால், இரண்டாவது முறையாக, ஏலத்தை மீண்டும் ரத்து செய்து, மறுதேதியின்றி ஒத்திவைக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !