திருவாமாத்துார் கோவிலில் நாளை செடல் திருவிழா
ADDED :3573 days ago
விழுப்புரம்: திருவாமாத்துார் ஊத்துக்காட்டு மாரியம்மன் கோவிலில் நாளை செடல் திருவிழா நடக்கிறது. விழுப்புரம் அடுத்த திரு வாமாத்துார் ஊத்துக்காட்டு ரேணுகை மாரியம்மன் செடல் திருவிழா, நாளை நடக்கிறது. விழாவினையொட்டி கடந்த 9ம் தேதி கொடியேற்றி, நாள்தோறும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்து வருகிறது. இன்று பூங்கரகத்துடன் அம்மன் வீதியுலாவும், நாளை காலை 7 மணிக்கு பம்பை ஆற்று நீர் மூலம் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும் நடக்கிறது. தொடர்ந்து காலை 9 மணிக்கு அலகு குத்துதல், பூந்தேர் இழுத்தல் மற்றும் பூங்கரகத்துடன் அம்மன் வீதி உலாவும், சாகை வார்த்தலும் நடக்கிறது.