மூன்றாம் பிறையைக் காணவும், நாலாம் பிறையைத் தவிர்க்கவும் சொல்லவது ஏன்?
ADDED :3449 days ago
மூன்றாம் பிறை என்பதன் போது, சந்திரன் தன் மூன்றாம் பிறைக் கிரணங்களுடன் சிவபெருமானின் தலையில் வசிக்கிறான். அதனால் அவனுக்கு பெருமை. அந்த மூன்றாம் பிறை தினத்தில் சந்திரனைப் பார்ப்பது, பெருமிதத்தைத் தரும். ஆனால் நான்காம் பிறை என்பதன்போது சந்திரன் அந்த நாளில் கணபதியை ஒருமுறை பரிகாரம் செய்தான். அதனால் கோபமுற்ற விநாயகர், நான்காம் பிறை நாளில் உன்னைப் பார்ப்பவர்கள் அவமானமும் அவமரியாதையும் பெறுவார்கள் என்று சாபம் கொடுத்ததாக புராணங்களில் சொல்லப்பட்டுள்ளது. எனவே, நாலாம் பிறையை பார்க்கக் கூடாது என்று சொல்லப்படுகிறது.