உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தென் மாநில கோவில்களுக்கு செல்ல விரைவில் புதிய ரயில் சேவை துவக்கம்!

தென் மாநில கோவில்களுக்கு செல்ல விரைவில் புதிய ரயில் சேவை துவக்கம்!

புதுடில்லி : ஒரே டிக்கெட்டில், தென் மாநிலங்களில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களை தரிசிக்கும் வகையிலான புதிய ரயில் சேவை, விரைவில் துவங்கப்பட உள்ளது. ரயில்வே பட்ஜெட்டில், சுற்றுலாவை ஊக்குவிக்கும் வகையில் புதிய ரயில்கள் இயக்கப்படும் என, அறிவிக்கப்பட்டது. அதன்படி,இந்திய உணவு மற்றும் சுற்றுலா கழகமான, ஐ.ஆர்.சி.டி.சி.,யுடன் இணைந்து, முதல் முறையாக, தென் மாநிலங்களில் உள்ள திருப்பதி, ராமேஸ்வரம் போன்ற கோவில்களுக்கு செல்லும் வகையில், நடுத்தர மற்றும் சொகுசு வசதி உடைய ரயில் இயக்கப்பட உள்ளது.

என்னென்ன வசதிகள்?

* இந்த ரயில் சேவைக்கு, டைகர் எக்ஸ்பிரஸ் என, பெயர் சூட்டப்பட்டுள்ளது
* பயணிகள் அமர்ந்து உணவு அருந்தும் வசதி, ரயில் நிலையத்தில் இருந்து கோவில்களுக்கு சென்று வருவதற்கான போக்குவரத்து வசதி, சுலபமான தரிசன வசதி போன்ற அனைத்து வசதிகளையும், ரயில்வே நிர்வாகமே செய்து தரும்
* இந்த புனித யாத்திரைக்கான காலம், ஒரு வாரம்.இதற்கான கட்டணம், ஒருவருக்கு குறைந்தபட்சம், 35 ஆயிரம் ரூபாயும், அதிகபட்சமாக, 54 ஆயிரம் ரூபாயும் செலுத்த வேண்டியிருக்கும்
* உணவு, இரவு தங்கும் விடுதி, உள்ளூர் சாலை போக்குவரத்து உள்ளிட்ட கட்டணங்களும் இதில் அடங்கும்
* அடுத்த மாதம், 16ல், இந்த ரயில் சேவையை ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு துவக்கி வைக்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !