ரமலான் சிந்தனைகள்12: இறைவனுக்கு பயப்படுவோம்
நீங்கள் இறைவன் ஒருவனையே வணங்க வேண்டும். அவன் விதித்துள்ள ஐங்காலத் தொழுகையையும் ரமலானின் நோன்பையும், ஏழை வரியான ஜக்காத்தையும் நிறைவேற்றி வாருங்கள். அதோடு, இறைவனின் இல்லமான கஃபாவையும் தரிசித்து ஹஜ்ஜை நிறைவேற்றிக் கொள்ளுங்கள். அப்போது சுவனபதி (சொர்க்கம்) உங்களுடையதாகி விடும்,” என்று நபிகள்நாயகம் சொல்கிறார்.அவர் மேலும் சொன்னார்.“நான் உங்களிடம் பலமான இரண்டு வஸ்துக்களை விட்டுச் செல்கிறேன். அவற்றை நீங்கள் பலமாகப் பற்றிப் பிடித்துக் கொண்டால், ஒருபோதும் வழிதவறி விட மாட்டீர்கள். ஒன்று இறைவேதமாகிய திருக்குர்ஆன். மற்றொன்று எனது வாழ்க்கையும், வாய்மொழியுமான சுன்னத் ஆகும்.ரமலான் நோன்பிருக்கும் ஒவ்வொருவர் மனதிலும் ஓட வேண்டிய சிந்தனை இது. இறைவனின் கட்டளைகளுக்கு நாம் பயந்து நடக்க வேண்டும். மது அருந்தக் கூடாது, பிறரைத் துன்புறுத்தக்கூடாது என்றெல்லாம் இறைவனின் கட்டளை இறங்கியிருக்கிறது. ஆனால் ஷைத்தானோ, இதையெல்லாம் செய் எனத் துாண்டிக்கொண்டே இருப்பான். இறைவனை நினைத்தபடியே உளப்பூர்வமாக நோன்பிருந்தால், அவன் ஓடி விடுவான்.
இன்று நோன்பு திறக்கும் நேரம்: மாலை 6.47 மணி
நாளை நோன்பு வைக்கும் நேரம்: காலை 4.16 மணி.