கல்கத்தா காளி அம்மன் கோயில் கும்பாபிஷேகம்
ADDED :3448 days ago
திருப்பரங்குன்றம்: மதுரை ஹார்விபட்டி இந்திரா நகர் கல்கத்தா காளி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. இரண்டு கால யாகசாலை பூஜைகள் முடிந்து கலசங்களில் புனிதநீர் ஊற்றப்பட்டது.தொடர்ந்து மூலவர்களுக்கு மகா அபிஷேகம் முடிந்து, இரவு சிறப்பு பூஜைகள் நடந்தது. இன்று முதல் மண்டல பூஜை துவங்குகிறது. கோயில் தலைவர் ஞானசேகரன், நிர்வாகிகள் ராகவன், திருஞானம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.