அங்காளம்மன் கோவிலில் அம்பாள் மூலமந்திர ஹோமம்!
ADDED :3446 days ago
புதுச்சேரி: சின்ன சுப்ராயப்பிள்ளை வீதி அங்காளம்மன் கோவிலில், அம்பாள் மூலமந்திர ஹோமம் நேற்று நடந்தது. புதுச்சேரி சின்ன சுப்ராயப்பிள்ளை வீதியில் உள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் மாதந்தோறும் தமிழ் மாத முதல் ஞாயிற்றுக்கிழமை, அம்பாளின் மூல மந்திர ஹோமம் நடத்தப்படுவது வழக்கம். அதன்படி, ஆனி மாத முதல் ஞாயிற்றுக் கிழமையான நேற்று காலை அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகமும், மாலையில் திருவிளக்கு பூஜையும் நடந்தது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழு தலைவர் விஜயகுமார் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.