தேவகோட்டை கண்டதேவி சொர்ணமூர்த்தீஸ்வரர் கோவில் தேரோட்டம்
ADDED :3511 days ago
தேவகோட்டை: தேவகோட்டை அருகே பிரசித்தி பெற்ற கண்டதேவி சொர்ணமூர்த்தீஸ்வரர் கோவில் ஆனித்திருவிழா ஜூன் 11 ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் சுவாமி, அம்மன், பரிவார மூர்த்திகள் சிறப்பு வாகனத்தில் வீதி உலா வந்தனர். ஒன்பதாம் நாளான நேற்று தேரோட்டம் நடந்தது. புதிய தேர் செய்யும் பணி நடப்பதால் சப்பரத்தில் சொர்ணமூர்த்தீஸ்வரர், பெரியநாயகி அம்மன் சென்றனர். நான்கு ரத வீதிகளிலும் சுற்றி வந்த சப்பரதேர் கோயிலை வாசலை அடைந்ததும் சிறப்பு தீபராதனை நடந்தது. பக்தர்கள் நேர்த்திகடனாக மாம்பழம் உட்பட பழங்களை பக்தர்களை நோக்கி வீசினர். சிவகங்கை சமஸ்தானம் கண்காணிப்பாளர் சுப்பிரமணியன் மற்றும் பக்தர்கள் பங்கேற்றனர். ராமநாதபுரம் டி.ஐ.ஜி.அனந்தகுமார் சோமானி, மாவட்ட எஸ்.பி.ஜியாவுல்ஹக் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.