பிராண நாதேஸ்வரர் கோவிலில் பிரதோஷ வழிபாடு
ADDED :3446 days ago
திருக்கனுார்: பி.எஸ்.பாளையம் பிராண நாதேஸ்வரர் கோவிலில் பிரதோஷ வழிபாடு நடந்தது. திருக்கனுார் அடுத்த பி.எஸ்.பாளையம் ஏரிக்கரையில் கடந்த ஆயிரம் ஆண்டுகள் பழமையான மங்கலாம்பிகை உடனுறை பிராண நாதேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில், பிரதோஷத்தை முன்னிட்டு கோவில் வளாகத்தில் உள்ள நந்திக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடந்தது. தொடர்ந்து, பிராண நாதேஸ்வரர் சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது. இதில், பி.எஸ்.பாளையம் பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கூனிச்சம்பட்டு கலியபெருமாள் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர். இதேபோல், கூனிச்சம்பட்டு, திருமங்கலம், மணலிப்பட்டு கிராமங்களில் அமைந்துள்ள சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு நடந்தது.