பழநி திருஆவினன்குடி கோயிலில் அருணகிரிநாதர் விழா
ADDED :3445 days ago
பழநி: பழநி திருஆவினன்குடி கோயிலில் அருணகிரி நாதர் விழா நடந்தது. திருப்புகழ் ஆசான் அருணகிரிநாதர் ஆனி மாதம் மூல நட்சத்திரத்தில் அவதரித்தார். அவரது ஜெயந்தி விழாவை முன்னிட்டு திருஆவினன்குடிகோயிலில் குழந்தை வேலாயுதசுவாமி, அருணகிரிநாதர் சன்னதியில் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடந்தது. நாதஸ்வரக்கல்லுாரி மாணவர்களின் மங்கள இசை, திருப்புகழ் அன்பர்களின் இன்னிசை நிகழ்ச்சிகள் நடந்தது. மலைக்கோயிலில் இரவு 7 மணிக்கு அருணகிரிநாதர் சப்பரத்தில் வெளிப்பிரகாரத்தை வலம் வந்தார். பக்தர்கள் பலர் பங்கேற்றனர். ஏற்பாடுகளை பெரியமேளக் குழுவினர் செய்தனர்.