வில்லியனுார் வரதராஜ பெருமாள் கோவில் தேரோட்டம் கோலாகலம்!
ADDED :3445 days ago
வில்லியனுார்: வில்லியனுார் தென்கலை வரதராஜ பெருமாள் கோவில் தேரோட்டம் நடந்தது. இக்கோவில் பிரம்மோற்சவ விழா கடந்த 12ம் தேதி கொடியேற்றதுடன் துவங்கியது. தொடர்ந்து, கடந்த 16ம் தேதி கருட சேவையும், 18ம் தேதி சுவாமி திருகல்யாண உற்சவமும் நடந்தது. முக்கிய நிகழ்வான தேர் திருவிழா நேற்று (௨௦ம் தேதி) காலை நடந்தது. விழாவில், திருக்கோவலுார் எம்பெருமானார் சீனுவாச ராமானுஜாச்சாரியார், முதல்வர் நாராயணசாமி, அமைச்சர் நமச்சிவாயம், தீப்பாய்ந்தன் எம்.எல்.ஏ., உள்ளிட்டோர் வடம் பிடித்து தேரோட்டத்தைத் துவக்கி வைத்தனர். தொடர்ந்து, நாளை (22ம் தேதி) பல்லக்கும், 23ம் தேதி ஊஞ்சல் உற்சவம் நடக்கிறது. ஏற்பாடுகளை கோவில் சிறப்பு அதிகாரி தங்கமணி மற்றும் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.