புலியகுளம் புனித அந்தோணியார் விழா தேர்பவனியுடன் நிறைவு!
ADDED :3445 days ago
கோவை: புலியகுளம் புனித அந்தோணியார் திருத்தல விழா, ஆடம்பர தேர்பவனியுடன் நிறைவடைந்தது. புலியகுளம் புனித அந்தோணியார் திருத்தலத்தில் கடந்த 6ம் தேதி முதல் 18ம் தேதி வரை 13 நாட்கள் சிறப்பு நவநாட்கள் நடந்தன. நேற்று முன்தினம் சிறப்பு திருவிழாவாக காலை 6:00 மணி திருப்பலியுடன் துவங்கி, மாலை 7:30 மணிக்கு ஆடம்பர தேர்பவனியுடனும், இரவு 9:00 மணிக்கு நற்கருணை ஆசிருடன் விழா நிறைவடைந்தது. கோவை மறைமாவட்ட பிஷப் தாமஸ் அக்வினாஸ், கோவை மறைமாவட்ட பொருளாளர் ஜான் சேவியர் திருப்பலி நடத்தினர். காலை 10:00 மணிக்கு வேண்டுதல் தேர்பவனியும்; மாலை 7:30 மணிக்கு ஆடம்பர தேர்பவனியும் நடந்தன. இரவு 9:00 மணிக்கு நற்கருணை அசீருடன் விழா நிறைவடைந்தது.