உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மதுராந்தகம் ஏரிகாத்த கோதண்டராமர் திருத்தேர் உலா

மதுராந்தகம் ஏரிகாத்த கோதண்டராமர் திருத்தேர் உலா

மதுராந்தகம்: புகழ்பெற்ற மதுராந்தகம் ஏரிகாத்த ராமர் கோவில் திருத்தேர் உலா நேற்று சிறப்பாக நடைபெற்றது.

மதுராந்தகத்தில் எழுந்தருளியுள்ள, ஏரிகாத்த ராமர் என அழைக்கப்படும் கோதண்டராமர் கோவில் பிரம்மோற்ஸவம், கடந்த, 12ல் தொடங்கி சிறப்பாக நடைபெற்று வருகிறது.விழாவின் ஒரு பகுதியாக, நேற்று காலை, 6:00 மணிக்கு, கோதண்டராமர் திருத்தேருக்கு எழுந்தருளினார். அதனைத் தொடர்ந்து காலை, 10:00 மணிக்கு திருத்தேர் உலா வடம் பிடித்தல் துவங்கியது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து, சுவாமிகளின் தேர் வடம் பிடித்தனர். மதுராந்தகம் நகரின் முக்கிய வீதிகளின் வழியாக திருத்தேர் உலா வந்தது. அதைத் தொடர்ந்து மாலை, 6:00 மணிக்கு திருத்தேரிலிருந்து மீண்டும் கோவிலுக்குள் எழுந்தருளினார். அதன் பிறகு, 7:00 மணிக்கு திருத்தேர் திருமஞ்சனம் மிகச் சிறப்பாக நடைபெற்றது. நிகழ்ச்சியில், மதுராந்தகம் சுற்று வட்டாரப் பகுதிகளிலிருந்து ஏராள மான பக்தர்கள் திருத்தேர் உலாவை கண்டுகளித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !